முறிகள் மோசடி: 7 பிரதிவாதிகளுக்கு நாளை (01) வரை விளக்கமறியல்

முறிகள் மோசடி: 7 பிரதிவாதிகளுக்கு நாளை (01) வரை விளக்கமறியல்

முறிகள் மோசடி: 7 பிரதிவாதிகளுக்கு நாளை (01) வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2021 | 5:01 pm

Colombo (News 1st) 2016 மே 31 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி முறிகள் ஏலத்தின் போது அரசுக்கு சொந்தமான 15 பில்லியன் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கின் 7 பிரதிவாதிகளும் நாளை (01) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க வேண்டாம் என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலான உத்தரவு நாளை காலை 9 மணியளவில் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெதிகே உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்