by Staff Writer 30-03-2021 | 4:02 PM
Colombo (News 1st) பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் நாவலப்பிட்டியில் தடம்புரண்டுள்ளது.
நாவலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று நண்பகல் 12.15 அளவில் ரயில் தடம்புரண்டுள்ளது.
இதனால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.