வியட்நாம் சோசலிசக் குடியரசின் புதிய தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் புதிய தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2021 | 6:02 pm

Colombo (News 1st) இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஹோ தீ தான் ட்ருக் ( Ho Thi Thanh Truc), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரத்தை இன்று கையளித்தார்.

ஜனாதிபதி மற்றும் வியட்நாம் தூதுவருக்கு இடையில் இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளை விஸ்தரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்குள்ள வாய்ப்புகளை அடையாளங்கண்டு அதன் மூலம் பிரதிபலனைப் பெற்றுக்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி வியட்நாமின் புதிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, சுற்றுலாத்துறை சார்ந்த உறவுகளை மேலும் பலப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்