போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 20 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 20 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 20 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2021 | 4:10 pm

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தற்காரர்களுடன் இணைந்து கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 20 சந்தேகநபர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கின் 14 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னணி போதைப்பொருள் கடத்தற்காரரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான களுத்தரகே உதார சம்பத் என்பவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணை உத்தரவிற்கு இணங்க, சர்வதேச பொலிஸாரிடமிருந்து சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், பிரதம நீதவானுக்கு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்