நான்கு வகையான பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை

நான்கு வகையான பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை

நான்கு வகையான பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2021 | 3:56 pm

Colombo (News 1st) உள்நாட்டில் பயன்படுத்தப்படும் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாளை (31) முதல் குறித்த உற்பத்திகளுக்கு நாட்டில் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கிணங்க, ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், 20 மைக்ரோனுக்கும் குறைந்த Lunch sheets, உணவு மற்றும் மருந்துகளற்ற Sachet பக்கெட்கள், Cotton buds மற்றும் காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்