யாழ். மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2021 | 3:14 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர், நேற்று (27) அதிகமானோர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

நல்லூர் – திருநெல்வேலி, பாற்பண்ணையை அண்மித்த பகுதியிலேயே தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதால் அப்பகுதி கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களை மக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

நேற்று 278 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 91,839 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா மரணமொன்று நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

கொழும்பு-06 ஐ சேர்ந்த 82 வயதான ஆணொருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதன்பிரகாரம், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 88,388 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ,893 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், 8,94,053 பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

24 மணித்தியாலங்களில் 9,889 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்