தரமற்ற தேங்காய் எண்ணெய்: அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை

by Staff Writer 28-03-2021 | 3:41 PM
Colombo (News 1st) தரமற்ற தேங்காய் எண்ணெய் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா 5 மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, மாவட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட 100 மாதிரிகள் இன்று ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள, போத்தலில் அடைக்கப்படாத தேங்காய் எண்ணெயின் மாதிரிகளே இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படு பரிசோதிக்கப்படவுள்ளது. நாட்டிற்கு தேங்காய் எண்ணெய் இறக்குதி செய்த இறக்குமதியாளர்களில் ஒருவர், தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தமை கண்டறியப்பட்டதையடுத்து, தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது.