சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன

சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன

சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2021 | 3:33 pm

Colombo (News 1st) சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

1980 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட சுற்றாடல் சட்டமே தற்போதும் நடைமுறையிலுள்ளதாக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதில் சில விதிகள் காலாவதியானதால், காலத்திற்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் திருத்த நடவடிக்கைகள் நிறைவடையும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சூழலை அழிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்