சம்பூர் – இத்திக்குளத்தில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சம்பூர் – இத்திக்குளத்தில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2021 | 5:22 pm

Colombo (News 1st) சம்பூர் – இத்திக்குளத்தில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்திக்குளத்தில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இத்திக்குளத்தை மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும், இந்தக் குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று (27) பிற்பகல் தனது நண்பர்களுடன் இத்திக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 15 வயதான சிறுவன் ஒருவனை முதலை காவு கொண்டுள்ளது.

சிறுவனைத் தேடும் நடவடிக்கை நேற்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று முற்பகல் குளத்தில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த இந்த சிறுவன் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியில் தரம் 10-இல் கல்வி கற்று வந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்