இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் தெரிவிப்பு

இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் தெரிவிப்பு

இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2021 | 3:27 pm

Colombo (News 1st) சீனாவுடன் தொடர்புகளை பேணும் போது, இலங்கையை பாடமாகக் கொள்வதாக பங்களாதேஷ் பிரதமரின் வௌிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

Indian Express பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது, இந்தியாவுடனான உறவுகள் சீர்குலைய இடமளிக்கப்போவதில்லை என கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவுகளை முதலீடு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டினால் செலுத்த முடியாதளவு கடனை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் பங்களாதேஷ் பிரதமரின் வௌிவிவகார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியிடமிருந்து பாடம் கற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான இயலுமை பங்களாதேஷூக்கு உள்ளதாகவும் நாடு பாரிய போராட்டத்தின் பின்னரே விடுதலை பெற்றதாகவும் கௌஹர் ரிஷ்வி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷூக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே பங்களாதேஷ் பிரதமரின் வௌிவிவகார ஆலோசகர் Indian Express பத்திரிகைக்கு இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்