English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Mar, 2021 | 4:39 pm
Colombo (News 1st) அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக Apophis எனும் விண்கல் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த விண்கல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
Apophis எனும் விண்கல் பூமிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என நாசா விஞ்ஞானிகள் கருதியிருந்தனர்.
2029 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளில் இரண்டு விண்கற்கள் பூமியைத் தாக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவை தடம் மாறிச் சென்றதால், அவற்றினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
எனினும், Apophis எனும் விண்கல் 2068 ஆம் ஆண்டிற்குள் பூமியை நோக்கி நெருங்கி வரும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 340 மீட்டர் விட்டம் கொண்ட Apophis எனும் விண்கல்லின் திசை மாறும் நிலையிலுள்ளதால், அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04 Jun, 2022 | 04:03 PM
07 Dec, 2021 | 05:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS