25 ஆவது சுமதி விருது வழங்கல் விழா: பல விருதுகளை சுவீகரித்த சிரச

25 ஆவது சுமதி விருது வழங்கல் விழா: பல விருதுகளை சுவீகரித்த சிரச

25 ஆவது சுமதி விருது வழங்கல் விழா: பல விருதுகளை சுவீகரித்த சிரச

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2021 | 4:03 pm

Colombo (News 1st) 25 ஆவது சுமதி விருது வழங்கல் விழாவில் சிரச தொலைக்காட்சி பல விருதுகளை சுவீகரித்துள்ளது.

பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ தலைமையில் நேற்று (26) சுமதி விருது வழங்கல் விழா நடைபெற்றது.

சிரச லக்ஷபதி நிகழ்ச்சியை நடத்தும் சந்தன சூரிய பண்டாரவிற்கு ஜூரியின் விசேட விருது கிடைத்தது.

சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருதினை சிரச தொலைக்காட்சியில் ஔிப்பரப்பாகும் Now Showing நிகழ்ச்சிக்காக இனோகா பிரேமவர்தன பெற்றுக்கொண்டார்.

சிறந்த தொலைக்காட்சி நாடக பாடலுக்கான விருது சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பான ‘வூ சக்காரங் ‘ நாடகத்தின் ‘அரமெசி ஆதரய’ பாடலுக்காக துமால் வர்ணகுலசூரிய பெற்றுக்கொண்டார்.

சரத் சந்திரசிறியின் ‘அடோ’ தொலைக்காட்சி நாடகத்திற்காக சிறந்த ஆற்றலுக்கான விருது வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்