சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அரச ஊழியர் தொழிற்சங்க ஒன்றியம் உதயம்

by Staff Writer 27-03-2021 | 8:31 PM
Colombo (News 1st) சுற்றாடல் பிரச்சினைகளின் போது நேரடியாக தலையிடும் அரச அதிகாரிகள் இன்று புதிய கூட்டணியை ஸ்தாபித்தனர். சுற்றாடலுக்கான அரச ஊழியர் தொழிற்சங்க ஒன்றியமாக அவர்கள் கைகோர்த்துள்ளனர். தெஹிவளை - அத்திடிய இயற்கை வள கேந்திரத்தில் ஒன்றுகூடிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் அதிகாரிகள் சங்கம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் அகில இலங்கை வன அதிகாரிகள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.