வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2021 | 3:37 pm

Colombo (News 1st) வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் குளமொன்றிலிருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியரை நீண்ட நேரமாகக் காணாததால் பிரதேச மக்கள் தேடியுள்ளனர்.

நீண்ட நேரத்தின் பின்னர் பொதுமக்களால் ஆசிரியரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா – தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய 33 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தின் கெடட் படைப்பிரிவின் கெப்டன் தரத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்