சிங்கராஜ வனத்தில் தனியார் காணியிலேயே மரங்கள் வெட்டப்பட்டுள்ளன: மஹிந்த அமரவீர

சிங்கராஜ வனத்தில் தனியார் காணியிலேயே மரங்கள் வெட்டப்பட்டுள்ளன: மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Bella Dalima

27 Mar, 2021 | 7:14 pm

Colombo (News 1st) சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு இடம்பெற்றுள்ள பகுதிகள் தொடர்பிலான தகவல்கள் அறிக்கையில் அடங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

பேசுபொருளாகியுள்ள காணியின் உரிமை தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்தால், அது ஒரு தனியார் நிலம் என உறுதியாவதாக மஹிந்த அமரவீர கூறினார்.

சிங்கராஜ வனத்திலிருந்து 3.6 கிலோமீட்டர் தூரத்திலேயே கிராமம் உள்ளது. இறக்குவானை பிரதான வீதிக்கு அருகில் உள்ளது என்றும் இந்த பகுதியில் மரம் வெட்டப்படவில்லை என்பது அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்