நிலாவரைக் கிணறு பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினருக்கும் பிரதேச சபைத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

நிலாவரைக் கிணறு பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினருக்கும் பிரதேச சபைத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2021 | 7:49 pm

Colombo (News 1st) யாழ். புத்தூர் நிலாவரைக் கிணறு பகுதியில், தொல்பொருள் திணைக்களத்தினருக்கும் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் இன்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூரில் நிலாவரைக் கிணறு பகுதிக்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று சென்றிருந்தனர்.

தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரிவித்து, பிரதேச சபைத் தலைவர் எதிர்ப்பை வௌிப்படுத்தினார்.

இதனையடுத்து, பிரதேச மக்களும் அங்கு கூடிய நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று கலந்துரையாடியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்