வெலிக்கடை சிறைச்சாலை காவலர் பணிநீக்கம்

போதைப்பொருளுடன் கைதான வெலிக்கடை சிறைச்சாலை காவலர் பணிநீக்கம்

by Staff Writer 25-03-2021 | 4:05 PM
Colombo (News 1st) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலையின் காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலரிடமிருந்து 01 கிராம் 510 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். வெலிசறை சுவாசநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவருக்கும், சந்தேகநபர் ஒருவருக்கும் பொறுப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில், பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் சிறைக்காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.