மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2021 | 4:23 pm

Colombo (News 1st) தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் டயகம பகுதியை சேர்ந்த 28 வயதான திருமணமான பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது வீட்டிலிருந்து நேற்று (24) புறப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதந்ததைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு இன்று முற்பகல் தகவல் வழங்கியுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய, பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன், நீதவான் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்