by Staff Writer 25-03-2021 | 3:18 PM
Colombo (News 1st) மரங்களை வெட்டுவதற்கோ சூழலை அழிப்பதற்கோ அரசாங்கம் எவருக்கும் அனுமதி வழங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த சில அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது ஜனாதிபதி இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் அழிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தில் இடம்பெற்ற குளறுபடிகளை தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, கிழக்கு முனையம் , MCC ஒப்பந்தம் ஆகியன கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிக்கல் மிகு விடயங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16 மாதங்களில் நாட்டினுள் தௌிவான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும், மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை தடைகளின்றி முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.