Sputnik V தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி

7 மில்லியன் Sputnik V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

by Staff Writer 24-03-2021 | 3:50 PM
Colombo (News 1st) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்ட, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசிகளில் 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகின்றது. சுகாதார அமைச்சரினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.