முறிகள் மோசடி: 8 பிரதிவாதிகளுக்கு விளக்கமறியல்  

முறிகள் மோசடி: 8 பிரதிவாதிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 24-03-2021 | 6:03 PM
Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி முறிகள் ஏலத்தின் போது அரசுக்கு சொந்தமான 36.98 பில்லியன் ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 32 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 08 பிரதிவாதிகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளான தமித் தொடவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இசடீன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் 11 ஆவது பிரதிவாதியின் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவினால் பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு குறித்து எதிர்வரும் 30 ஆம் திகதி கட்டளையை பிறப்பிக்க இன்று தீர்மானிக்கப்பட்டது.