by Staff Writer 24-03-2021 | 9:09 PM
Colombo (News 1st) சித்திரை வருடப் பிறப்பு நெருங்கி வருகிறது. பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
பண்டாரவளையின் அநேகமான வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோகிராம் உளுந்து 2000 ரூபாவிற்கும் சீனி ஒரு கிலோகிராம் 140 ரூபாவிற்கும் பயறு 800 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தே காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு உளுந்து 750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
பயறு ஒரு கிலோகிராம் 850 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன், யாழ். சந்தையில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து விற்பனை குறைவாகவே உள்ளது.
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களிலும் இன்றைய நிலவரப்படி உளுந்து மற்றும் பயறு ஆகியவற்றின் விலை அதிகரித்திருந்தது.
இறக்குமதி குறைவடைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களே விலையேற்றத்திற்கு காரணம் என வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.