குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2021 | 3:34 pm

Colombo (News 1st) குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

ஜசீரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பயந்து, தாம் பணிபுரிந்த வீடுகளிலிருந்து தப்பிச் சென்ற இவர்களை குவைத்தின் பாதுகாப்பு படையினர் பொறுப்பேற்று மீண்டும் தாயகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

நாடு திரும்பியவர்கள் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்