இலங்கை தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2021 | 8:23 pm

Colombo (News 1st) இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு வௌிநடப்புச் செய்தமை உலகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம் என திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் என்பதாலேயே வௌிநடப்பு செய்திருப்பதாகவும் இல்லாவிட்டால் ஆதரவாகவே இந்தியா வாக்களித்திருக்கும் எனவும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை – உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என தி.மு.க தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், வெிளிநடப்பு செய்தமைக்காக இந்தியாவிற்கு இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ​மோடி இழைத்திருக்கும் பச்சைத் துரோகத்திற்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயமே அதுவென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்