அமரபுர பீட மகாநாயக்கரின் இறுதிக் கிரியைகள் நாளை; துக்க தினம் பிரகடனம்

அமரபுர பீட மகாநாயக்கரின் இறுதிக் கிரியைகள் நாளை; துக்க தினம் பிரகடனம்

அமரபுர பீட மகாநாயக்கரின் இறுதிக் கிரியைகள் நாளை; துக்க தினம் பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2021 | 3:40 pm

Colombo (News 1st) இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர், காலஞ்சென்ற கொட்டுகொட தம்மாவாச நாயக்கத் தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை (25) நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நாளை துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இறைச்சிக்கடைகளும் நாளை மூடப்படவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

கல்கிசை தர்மபாலாராமய விகாரையில் இருந்து புத்த சாசனத்திற்கு சேவையாற்றி வந்த மகாநாயக்க தேரர் தனது 88 ஆவது வயதில் நேற்று முன்தினம் (22) இயற்கை எய்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்