NIC ஒரு நாள் சேவையை மீள ஆரம்பிக்க திட்டம்

தேசிய அடையாள அட்டை விநியோக ஒரு நாள் சேவையை மீள ஆரம்பிக்க திட்டம்

by Bella Dalima 23-03-2021 | 3:39 PM
Colombo (News 1st) தேசிய அடையாள அட்டை விநியோக ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய அடையாள அட்டைகளை விரைவில் பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண சேவைகளின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் பிரதேச செயலகத்தினூடாக தமக்குரிய விண்ணப்பங்களைப் பெற்று ஆட்பதிவு திணைக்களத்தில் சமர்ப்பித்திருந்தால், 0115 226 126 அல்லது 0115 226 100 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அடையாள அட்டையை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று, பத்தரமுல்லை அலுவலகத்திலோ அல்லது தென் மாகாண காரியாலயத்திலோ அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரும்புவோர், மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தமக்கான தினத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமானதென ஆட்பதிவு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.