சீனா - இலங்கை இடையில் நாணய பரிமாற்ற உடன்படிக்கை

சீனா - இலங்கை இடையில் நாணய பரிமாற்றத்திற்கான உடன்படிக்கை

by Bella Dalima 23-03-2021 | 4:04 PM
Colombo (News 1st) சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இரதரப்பு நாணய பரிமாற்றத்திற்கு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்திக்காக வர்த்தக மற்றும் நேரடி முதலீட்டு ஊக்குவிப்பின் நோக்கில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையூடாக இலங்கை மத்திய வங்கிக்கு அதிகபட்சமாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.