முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2021 | 3:20 pm

Colombo (News 1st) சர்வதேச வளிமண்டலவியல் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.

விசேடமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு கரையோர வீதியில் இந்த அலுவலகம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், முல்லைத்தீவு இராணுவ படைத்தளபதி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க மற்றும் வானிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச வளிமண்டலவியல் தினத்திற்கான நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்