நைஜரில் பல கிராமங்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு: 137 பேர் உயிரிழப்பு

நைஜரில் பல கிராமங்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு: 137 பேர் உயிரிழப்பு

நைஜரில் பல கிராமங்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு: 137 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2021 | 6:40 pm

Colombo (News 1st) நைஜரில் துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.

நைஜரின் தென்மேற்கு பகுதியில் உள்ள பல கிராமங்கள் தாக்குதல்தாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பாரிய வன்முறைச் சம்பவம் இதுவென நைஜர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவறிக்கையின் பிரகாரம், மிகவும் வறுமைக்கோட்டின் கீழுள்ள நாடாக நைஜர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நைஜரில் தொடர்ச்சியாக வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்