by Bella Dalima 23-03-2021 | 3:27 PM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (24) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, மொல்லிகொட, மொரன்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 08 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களுத்துறை அல்விஸ் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.