எதிர்ப்பு நடவடிக்கையால் கொழும்பில் வாகன நெரிசல் 

எதிர்ப்பு நடவடிக்கையால் கொழும்பில் வாகன நெரிசல் 

எதிர்ப்பு நடவடிக்கையால் கொழும்பில் வாகன நெரிசல் 

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2021 | 5:11 pm

Colombo (News 1st) கொழும்பு புறநகர் பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் தொழிலாளர் போராட்ட மையம் என்பன முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடிக்கையினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தனியார் பிரிவில் சேவையாற்றுபவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரித்தல் உள்ளிட்ட 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் தேசிய வைத்தியசாலையில் இருந்து பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதி அமைச்சின் முன்றலில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்