சப்புகஸ்கந்த ஊழியர்களுக்கு கொரோனா - விசாரிக்க குழு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்களுக்கு கொ​ரோனா - விசாரிக்க குழு நியமனம்

by Chandrasekaram Chandravadani 22-03-2021 | 6:08 PM
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சந்திக்கா எத்துகல குழுவின் தலைவராக செயற்படுகின்றார். எரிசக்தி அமைச்சின் ஆலோசகர் லலித் வசந்த, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் புத்திக்க மடிஹேவா, எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நயனா சேனாரத்ன, பெற்றோலிய களஞ்சிய நிறுவனத்தின் வைத்திய அதிகாரி ரோஷினி ருசிரிவர்தன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். சுகாதார ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார். அறிக்கை10 நாட்களுக்குள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 354 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 1100 பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

ஏனைய செய்திகள்