கம்பஹாவில் நாளை(23)  நீர் வெட்டு

கம்பஹாவில் நாளை(23) நீர் வெட்டு

கம்பஹாவில் நாளை(23) நீர் வெட்டு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Mar, 2021 | 6:14 pm

 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(23) காலை 09 மணி முதல் 06 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, பேலியகொட , வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளில்
நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இந்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த உப மின்னுற்பத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த பணிகள் காரணமாக, நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்