மலையக மக்கள் முன்னணியிலிருந்து அருணாச்சலம் அரவிந்தகுமார் நீக்கம்

by Staff Writer 21-03-2021 | 9:05 PM
Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் ஹட்டனிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது.