அதிவேக வீதியில் பெண் துஷ்பிரயோகம் ; குற்றவாளிகளுக்கு மரணதண்டனை

அதிவேக வீதியில் பெண் துஷ்பிரயோகம் ; குற்றவாளிகளுக்கு மரணதண்டனை

அதிவேக வீதியில் பெண் துஷ்பிரயோகம் ; குற்றவாளிகளுக்கு மரணதண்டனை

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2021 | 3:27 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் – லாஹூர் நகரின் அதிவேக வீதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்ச் பிரஜையான பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதிவேக வீதியில் பயணித்த போது, காரின் பெட்ரோல் தீர்ந்தமையால் தரித்து நின்றுள்ளனர்.

இதனைக் கண்ட குற்றவாளிகள் இருவரும் அவர்களது காரை உடைத்து திருடியதுடன், பிள்ளைகளின் முன்னாலேயே குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இவர்கள் துஷ்பிரயோகம், கடத்தல், கொள்ளை மற்றும் பயங்கரவாத குற்றங்களின் கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லாஹூரிலுள்ள விசேட நீதிமன்றமொன்றினால் நேற்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்