நாடளாவிய ரீதியில் வாகனங்களை பரிசோதிக்க நடவடிக்கை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் வாகனங்களை பரிசோதிக்க நடவடிக்கை

by Staff Writer 20-03-2021 | 4:51 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது போதை மற்றும் முறையற்ற விதத்தில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளைக் கைது செய்யும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தௌிவுபடுத்தினார். மது போதையில் வாகனம் செலுத்துவோரை பரிசோதிப்பதற்கு தேவையான உபகரணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பெற்றுக்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். போட்டி போட்டுக்கொண்டு பஸ்களை செலுத்தும் சாரதிகளையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.