சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கவனயீர்ப்புப் பேரணியுடன் நிறைவு

by Bella Dalima 19-03-2021 | 7:52 PM
Colombo (News 1st) சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் கவனயீர்ப்புப் பேரணியுடன் இன்று முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு - மாவடிவேம்பு, மருங்கையடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது. சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சித்த போது அமைதியின்மை ஏற்பட்டது. தடைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் ​பேரணி, சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.