காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வலுக்கிறது

by Staff Writer 19-03-2021 | 9:00 PM
Colombo (News 1st) வல்சப்புகல விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இன்றுடன் 62 நாட்களாகின்றன. பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன. உத்தேச காட்டு யானை முகாமைத்துவ திட்டத்திற்கு ஏற்ப வர்த்தமானியை வௌியிட வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாகும். இந்த போராட்டத்திற்கு 86 விவசாய அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன. காட்டு யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குமாறு கோரி பல மாகாணங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இந்த நிலையில், வல்சப்புகல விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மஹியங்கனை விவசாயிகள் மூன்றாவது நாளாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். மஹியங்கனை , தெஹிகொல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் நிலவும் காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறே இவர்கள் கோருகின்றனர். காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி மதவாச்சி நகரிலும் சத்தியாக்கிரக போரட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.