பெற்ற குழந்தையை குழி தோண்டி புதைத்த தாய்: வவுனியாவில் சம்பவம்

பெற்ற குழந்தையை குழி தோண்டி புதைத்த தாய்: வவுனியாவில் சம்பவம்

பெற்ற குழந்தையை குழி தோண்டி புதைத்த தாய்: வவுனியாவில் சம்பவம்

எழுத்தாளர் Bella Dalima

19 Mar, 2021 | 3:29 pm

Colombo (News 1st) வவுனியா – பம்பைமடு பகுதியில் பெற்ற குழந்தையை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் தாயொருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பம்பைமடு பகுதியை சேர்ந்த 36 வயதான தாய் ஒருவரே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாயால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசுவின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்தவுடனேயே சிசு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் தாயை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்