இலஞ்ச வழக்கிலிருந்து ரோஹித அபேகுணவர்தன விடுதலை

இலஞ்ச வழக்கிலிருந்து ரோஹித அபேகுணவர்தன விடுதலை

இலஞ்ச வழக்கிலிருந்து ரோஹித அபேகுணவர்தன விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

19 Mar, 2021 | 3:22 pm

Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

அமைச்சருக்கு எதிரான குற்றப்பத்திரம் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

2014 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் அமைச்சராக செயற்பட்ட போது , தனது வருமானத்தில் உழைக்க முடியாத 412 இலட்சம் பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளராகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்