by Staff Writer 17-03-2021 | 6:15 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அலுவலகம் நாளை (18) முதல் மீண்டும் அதேபோன்று இயங்கும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று யாழ்ப்பாணத்தில் உறுதியளித்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திலுள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு அண்மையில் எடுத்துச்செல்லப்பட்டன.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளரின் கடிதத்தின் பிரகாரம் ஆவணங்கள் அனுப்பப்பட்டதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் கூறியிருந்தார்.