கிணற்றில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடியில் கிணற்றில் வீழ்ந்து இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

by Staff Writer 17-03-2021 | 4:17 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, தேற்றாத்தீவு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று (16) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றில் வீழ்ந்த குழந்தை மீட்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.