ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2021 | 4:04 pm

Colombo (News 1st) ரயில் என்ஜின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்