முறிகள் மோசடி: பிரதிவாதிகள் 08 பேரையும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

முறிகள் மோசடி: பிரதிவாதிகள் 08 பேரையும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2021 | 6:28 pm

Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகள் 08 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமித் தொட்டவத்த, மஞ்சுள திலகரத்ன, எம். இஸடின் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜனசுந்தர கடும் ஆட்சேபனையை வௌியிட்டார்.

அந்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்