மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்ட லயன் குடியிருப்பில் தீ பரவல்; 20 வீடுகள் தீக்கிரை

மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்ட லயன் குடியிருப்பில் தீ பரவல்; 20 வீடுகள் தீக்கிரை

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2021 | 5:22 pm

Colombo (News 1st) மஸ்கெலியா – குயின்ஸ்லேண்ட் தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.

சுமார் 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 12.30 அளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இராணுவம், பொலிஸார், பிரதேச மக்கள் இணைந்து தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் குயின்ஸ்லேண்ட் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்