248 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

248 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

248 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Mar, 2021 | 10:06 am

Colombo (News 1st) இன்று (16) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 331 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 83 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

ஏனைய 248 பேருள் மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக குறித்த செயலணி தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 49 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 28 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 34 நபர்களும் கண்டி மாவட்டத்தில் 11 பேரும் பதுளை மாவட்டத்தில் 07 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 08 பேரும் புத்தளம் மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் மூவரும் மன்னார் மாவட்டத்தில் 06 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 09 பேரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியில் நால்வர், மருதானை பிரதேசத்தில் மூவர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை – கொஸ்மோதரை பகுதியில் 28 பேருக்கும் மொறவக்க பிரதேசத்தில் 15 பேருக்கும் பஸ்கொட பகுதியில் நால்வருக்கும் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் மூவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதேசத்தில் இருவரும் நோர்வூட் பகுதியில் மூவரும் புசல்லாவை பகுதியில் ஒருவரும் பொகவந்தலாவை பகுதியில் ஒருவரும் மஸ்கெலியா பகுதியில் இருவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (16) காலை வரையில் நாட்டில் 88,238 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ள அதேநேரம், 84,969 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (15) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம், கம்பஹா, கொச்சிக்கடை, பமுனுகம மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்