by Bella Dalima 16-03-2021 | 4:53 PM
Colombo (News 1st) புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வது தொடர்பில் முன்மொழிவு மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவற்றை தடை செய்வதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இலங்கை அரசாங்கம் புர்கா அணிவதற்கு முன்மொழியப்பட்ட தடையை பரிசீலிக்க நேரம் எடுக்கும் என்று கூறியிருந்தார்.