ஐஸ்லாந்தில் 20 நாட்களில் 40,000 நில அதிர்வுகள்

ஐஸ்லாந்தில் 20 நாட்களில் 40,000 நில அதிர்வுகள் பதிவு

by Bella Dalima 16-03-2021 | 4:04 PM
Colombo (News 1st) ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 20 நாட்களில் 40,000 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. பல எரிமலைகளால் சூழப்பட்ட நாடு ஐஸ்லாந்து. ஐரோப்பாவில் சிறிய தீவு நாடாக உள்ள அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40,000 நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் ஐஸ்லாந்தின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதிக அளவில் எரிமலைகள் உள்ளதால், நில அதிர்வுகள் காரணமாக அவற்றில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.