நெதர்லாந்தில் Astrazeneca தடுப்பூசி பாவனை இடைநிறுத்தம்

நெதர்லாந்தில் Astrazeneca தடுப்பூசி பாவனை இடைநிறுத்தம்

நெதர்லாந்தில் Astrazeneca தடுப்பூசி பாவனை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2021 | 4:17 pm

Colombo (News 1st) நெதர்லாந்தில் பொதுமக்களுக்கு Astrazeneca தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Astrazeneca தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் அச்சம் காரணமாக பல நாடுகள் அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நெதா்லாந்தும் இணைந்துள்ளது.

பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகமும் Astrazeneca நிறுவனமும் உருவாக்கியுள்ள குறித்த தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு அறிவித்துள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Astrazeneca தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவது இந்த மாதம் 29 ஆம் திகதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக நெதா்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஐரிஷ் குடியரசு, டென்மாா்க், நோர்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் அந்த தடுப்பூசிப் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்