சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை

சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை

சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2021 | 9:07 am

Colombo (News 1st) வரி வருமானத்தில் 15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்